வரும் 15ம் தேதி பிரமோற்சவ கொடியேற்றம் திருவீதியுலா வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயிலில்

திருவலம், பிப்.21: திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயிலில் வரும் 15ம் ேததி பிரமோற்சவ கொடியேற்றப்படுகிறது. இதையொட்டி, 21ம் தேதி நடைபெறும் தேர் திருவீதி உலாவிற்கான வாகனங்கள் சீரமைப்பு மற்றும் வர்ணங்கள் தீட்டும் பணிகள் நேற்று முதல் நடந்து வருகிறது. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் பொன்னையாற்றங்கரை ‘நீவா’ நதிக்கரையில் வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த தனுர்மத்யம்பாள் சமேத வில்வநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் பிரதோஷ வழிபாடுகள்,சிவகாமியம்பாள் சமேத நடராஜப்பெருமாள் ஆருத்ரா தரிசனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள்,வழிபாடுகள் நடந்து வருகிறது. மேலும் ஆண்டுதோறும் மாசி மாதம் பிரமோற்சவ தேர் திருவிழா நடப்பது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பிரமோற்சவ தேர்திருவிழா வரும் பங்குனி மாதம் (மார்ச் 15ந் தேதி) பிரமோற்சவ தேர் திருவிழா கொடியேற்றது நடத்த ஊர் பொதுமக்கள், திருவிழா கமிட்டியினர் முடிவு செய்தனர். அதன்படி பங்குனி மாதம் 2ந்தேதி (மார்ச் 15ந்தேதி) பிரமோற்சவ கொடியேற்றம்,மார்ச் 21ந்தேதி பிரமோற்சவ தேர் திருவிழா நடைபெற உள்ளது. அன்று முதல் தினந்தோறும் உற்சவமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு பகல் மற்றும் இரவு நேரங்களில் மாட வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். இதற்காக சுவாமி வீதி உலாவிற்கான வாகனங்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்