வரி செலுத்தாத கட்டிடங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்: திருவள்ளூர் நகராட்சி எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ஜி.ராஜலட்சுமி அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவள்ளூர் நகராட்சி பகுதியில் நீண்டகாலமாக சொத்து வரி செலுத்தாத கட்டிடங்களில் மின் இணைப்பை துண்டிக்க தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளருக்கு நகராட்சி சார்பாக ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. திருவள்ளூர் நகராட்சி பகுதியில் 12 ஆயிரத்து 500 குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளது. இவற்றில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் போன்ற வரி இனங்கள் நிலுவை கடந்த மே 31ம் வரை ரூ.722.38 லட்சமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. எனவே பல ஆண்டுகளாக சொத்துவரி நிலுவை வைத்துள்ள உரிமையாளர்களின் கட்டிடத்தின் மின் இணைப்பை துண்டிக்க தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளருக்கு நகராட்சி மூலம் கடிதம் கொடுத்து மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

சென்னை மணலி புதுநகர் அருகே தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் குடோனில் தீ விபத்து

பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம்

யூடியூபர் சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்