வனதொழில் பழகுநர் பணிக்கான தேர்வு மையம் குறைப்பு

சென்னை: வனதொழில் பழகுனர் பணி தேர்விற்கான தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு வன சார்நிலை பணியில் அடங்கிய வன தொழில் பழகுநர்(குரூப் 6) பதவிக்கான காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கு டிசம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 11ம் தேதி வரை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. அதாவது, காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் தேர்வு நடைபெறுகிறது. முதலில் 15 மையங்களில் எழுத்து தேர்வு நடத்த திட்டமிட்டிருந்தது. தற்போது இப்பதவிக்கான எழுத்து தேர்வினை கணினி வழி தேர்வாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய 7 மையங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கணினி வழி தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தனியார் பள்ளிக்கு இணையாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை: முதல் நாளிலேயே வழங்க ஏற்பாடு