வத்தலக்குண்டு சங்கர் நகரில் மின் விளக்குகள் பொருத்தம்: பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு

 

வத்தலக்குண்டு, பிப். 14: வத்தலக்குண்டு பேரூராட்சிக்குட்பட்டது சங்கர் நகர். இங்குள்ள சின்ன பள்ளிவாசல் பகுதி தெருவில் பல ஆண்டுகளாக மின் விளக்குகள் இல்லாமல் இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் அவதியடைந்து வந்தனர். இப்பகுதியில் மின் விளக்குகள் அமைத்து தருமாறு பேரூராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதியில் மின் விளக்குகள் அமைத்து கொடுத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த திமுக ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் சின்னதுரை, பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணை தலைவர் தர்மலிங்கம், செயல் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் முயற்சி எடுத்த கவுன்சிலர் சிவக்குமாருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related posts

லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு

திருச்சி அருகே விபத்து கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்

காயங்களுடன் பெண் மீட்பு