வத்தலக்குண்டு குளிப்பட்டியில் பயன்பாட்டிற்கு வருமா புதிய பாலம்…? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 

வத்தலக்குண்டு, பிப். 11: வத்தலக்குண்டு அடுத்துள்ள குளிப்பட்டி பகுதியில் மருதாநதி செல்கிறது. மழைக்காலங்களின் போது இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது குளிப்பட்டி, சிவஞானபுரம், கோம்பைபட்டி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் 10 கிமீ தூரம் சுற்றி செல்ல வேண்டியிருந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது மருதாநதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதிமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் அதிமுக அரசு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் அமைச்சர் ஐ.பெரியசாமியின் தீவிர முயற்சியில் கடந்த ஆண்டு இந்த ஆற்றில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பாலம் கட்டுமான பணி துவங்கி தற்போது பணி முடிவடைந்துள்ளது. ஆனால் மீனாட்சிபுரம்- குளிப்பட்டி தார் சாலை பணிகள் முடியாமல் உள்ளது. இதனால் பாலம் திறக்கப்படாமல் உள்ளது.

இருப்பினும் பொதுமக்கள் பாலத்தை பயன்படுத்த துவங்கி விட்டனர். ஆனால் பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறக்கிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே தார் சாலை பணிகளை துரிதப்படுத்தி பாலத்தை திறக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை
எழுந்துள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்