வத்தலக்குண்டுவில் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு நாடகம்

வத்தலக்குண்டு, மார்ச் 4: வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவா பஸ் நிலையத்தில் ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் வளம் மற்றும் காலநிலை மாற்றத்துறை உதவியுடன் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறையும், கடமலைக்குண்டு தொண்டு நிறுவனமும் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தெரு நாடகத்தை நடத்தியது.

நாடகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க செய்ய வேண்டியது குறித்தும், செய்யக்கூடாதவை குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பட்டியலிடப்பட்டது. தொடர்ந்து பயணிகளுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வயைிட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவன செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related posts

காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் வேலூரில் டிவிவி தினகரன் பேட்டி