வடக்கு வாயலூரில் நெல் கொள்முதல் நிலையம்: எம்எல்ஏ பாபு திறந்து வைத்தார்

செய்யூர்: லத்தூர் ஒன்றியத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் பாபு நேற்று திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம் வடக்கு வாயலூர் ஊராட்சியில் விவசாயிகள் தாங்கள் பயிரிட்டு அறுவடை செய்த நெல்லை அரசு நேரடியாக கொள்முதல் செய்யும் வகையில் தங்கள் பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் ஏற்படுத்தி தரவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இவ்வூராட்சியில் புதிய அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்தது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

இதில், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு கலந்துகொண்டு புதிய நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, விவசாயிகளிடம் இருந்து நேரடி நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். இதில், லத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சீனுவாசன், செல்வகுமார், ஊராட்சி தலைவர் அனிதா பலராமன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் இராமமூர்த்தி, வெங்கடேசன், நெருப்பு ரவி, தொண்டமநல்லூர் ராஜு, கலைமணி, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல், நீலமங்கலம் ஊராட்சியில் நடந்த புதிய நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழாவில் எம்எல்ஏ பனையர் பாபு கலந்துக்கொண்டு கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு