வடக்கு செய்யூரில் புனித அந்தோணியார் ஆலய திருப்பலி

 

செய்யூர்: செய்யூரில் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித தோமையார் திருநாள் திருப்பலி நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் ஊராட்சியில் வடக்கு செய்யூரில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய வளாகத்தில் இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களின் ஒருவரான புனித தோமையாரின் பாத பதிவுகள், முழங்கால் தடம், கைவிரல் பதிவுகள் கொண்டுள்ள ஜெபத்தோட்ட பூங்கா ஆகியவை உள்ளன. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் புனித தோமையாரின் திருநாள் விழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், இந்தாண்டு புனித தோமையாரின் திருநாள் விழா நேற்று நடந்தது. இதில், அருட்பணி பங்குத்தந்தை ஜெயன் சந்தியாரு தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்கள் மெழுகு ஏந்தியவாறு ஜெப தோட்டம் வந்து புனித தோமையார் பாதப்பதிவு அடங்கிய சிறு பாறை மற்றும் போதனை கல் உள்ளிட்டவைகளுக்கு மலர் தூவி வணங்கினர்.

இந்த விழாவில், செய்யூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழா ஏற்பாடுகளை திருச்சபை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் செய்திருந்தார். மேலும், கோயில் நிர்வாகிகள் நிர்மல், பிரபு, குயின், அலெக்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்