வடக்கலூர் அகரம் கிராமத்தில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது

குன்னம்,செப்.13: குன்னம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வடக்கலூர் அகரம் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி சிந்துமதி (27). இவர் தனது வீட்டில் நேற்று முன்தினம் இரவு வெளிக்கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டுபேர், சிந்துநதி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடினர்.

இதைக்கண்ட சிந்துமதி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் செயினை பறித்துக் கொண்டு ஓடிய கொள்ளையர்களை விரட்டினர். இதில் ஒருவலை பொதுமக்கள் பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்ட கொள்ளையரிடம் விசாரித்ததில் அவர், கள்ளக்குறிச்சி அருகே உள்ள அலங்கரி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி (57) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக மங்களமேடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யாசாமியிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அய்யாசாமியை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்