லிப்ட் கொடுத்து மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

கோவில்பட்டி, ஆக. 15: கோவில்பட்டி 2வது செக்கடித் தெருவை சேர்ந்தவர் வாசுகி (68). பூக்கட்டும் தொழிலாளியான இவர், சம்பவத்தன்று மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த வாலிபர், லிப்ட் கொடுப்பதாக கூறி வாசுகியை ஏற்றிச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும் அவர், வைத்திருந்த பையில் இருந்த 3 கிராம் தங்க மோதிரம், ரூ.200ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து மூதாட்டியிடம் நகை, பணத்தை பறித்து சென்ற கோவில்பட்டி வடக்கு புதுக்கிராமம் 3வது தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் மாரிமுத்து (37) என்பவரை கைது செய்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்