ரோகிணி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்

அஞ்சுகிராமம், ஏப்.14 : அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. ரோகிணி கல்லூரி தலைவர் நீலமார்த்தாண்டன், துணை தலைவர் முனைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் முனைவர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். ராஜேஷ் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மகளிர் அதிகாரமளித்தல் குழு தலைவர் முனைவர் தேவி வரவேற்று பேசினார். சிவில் இன்ஜினியரிங் பேராசிரியை ரெனோ இன்பேன்ட சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக இலக்கியம் மற்றும் ஆன்மீக தளங்களில் பேருரைகள் ஆற்றும் பட்டிமன்ற தமிழ் மேடைப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் மற்றும் பட்டிமன்ற புகழ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பெண்களுக்கு அதிகாரமளித்தல், மகளிர் சமுதாய மற்றும் பொருளாதார மேம்பாடு பெறச்செய்தல் பற்றி எடுத்துரைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் அதிகாரமளித்தல் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். மின் மற்றும் மின்னணு துறையின் பேராசிரியை முனைவர் சௌதிலி நன்றி கூறினார்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை