ரூ.1 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

 

மொடக்குறிச்சி, மார்ச் 17: அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,582 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.29.29க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.24.39க்கும், சராசரி விலையாக ரூ.28.79 க்கும் ஏலம் போனது. மொத்தம் 4,151 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 869 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

Related posts

காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் வேலூரில் டிவிவி தினகரன் பேட்டி