ராயர் பாளையம் நவோதயா வித்யாலயாவில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

காரைக்கால்,பிப்.16: காரைக்கால் அடுத்த ராயர் பாளையத்தில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி துணை முதல்வர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். காரைக்கால் அனைத்து மகளிர் காவல் நிலைய துணை ஆய்வாளர் தனலட்சுமி உரையாற்றினார்.

அப்போது அவர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் முறையை விளக்கி நேர்மறையான சிந்தனை செயல்பாடுகளுக்கு மாணவ, மாணவிகளை ஊக்குவித்தார். பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளையும் சட்டரீதியாக அவைகளை எதிர்கொள்ளும் முறைகளையும் விளக்கினார். துணை ஆய்வாளர் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நிகழ்வாக இது நடைபெற்றது. முன்னதாக ஆங்கில ஆசிரியர் பெரிய கேத்தையா வரவேற்றார்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்