ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு: எம்பி, எம்எல்ஏ திறந்து வைத்தனர்

செங்கல்பட்டு: தென் மாநிலம் முழுவதும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம்,
விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இந்நிறுவனம், தமிழகத்தில் உள்ள
அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது ஷோரூம்களை திறந்து வெற்றி கண்டுள்ளது.
உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காக www.ramrajcotton.in என்ற இணையதளத்தில்
ஆன்லைன் விற்பனையை விரிவுபடுத்தியதோடு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற
நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு ரயில்
நிலையம் எதிரில் நேற்று ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய ஷோரூம்
திறப்பு விழா நடந்தது. எம்பி செல்வம் ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து
வைத்தார். எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் குத்துவிளக்கேற்றினார். அரசு
வழக்கறிஞர் டி.திருமுருகன் முதல் விற்பனையை துவக்கினார். செங்கல்பட்டு நகர
திமுக செயலாளர் ச.நரேந்திரன், ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோர் முதல் விற்பனையை
பெற்று கொண்டனர். எப்போதும், வீட்டில் அணியும் வகையில் வேட்டியுடன் கூடிய
டீ சர்ட் Combo Packஐ ராம்ராஜ் காட்டன் நிறுவனம் புதிதாக அறிமுகம்
செய்துள்ளது. இந்நிறுவனம் உற்பத்தி செய்யும் அனைத்து ரகங்களும் பருத்தி
நூலிழைகளை கொண்டு தயார் செய்யப்பட்டது. வேட்டிகள், சர்ட்டுகள், பனியன்கள்
தயாரித்து தென்னிந்தியா, வடமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலும் விற்பனை
செய்கிறது.  இந்தியாவிலேயே வேட்டிக்கென்று தனி முத்திரை பதித்து
முதலிடத்தில் உள்ள ஒரே நிறுவனம் ராம்ராஜ் காட்டன் என்பது அனைவரும்
அறிந்ததே….

Related posts

அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்தை வாங்கும் தமிழ்நாடு மின் வாரியம்: அதிகாரிகள் தகவல்

காக்களூர் சிட்கோ பெயின்ட் கம்பெனி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

உலகளவில் 4 பேர் மட்டும் பாதிக்கப்படும் அரிய நோயினால் கள்ளக்குறிச்சியை சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பாதிப்பு: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்; மருத்துவக் குழுவினருக்கு டீன் தேரணிராஜன் பாராட்டு