ராணுவ வீரர் மாயம்

ஈரோடு, பிப். 4: ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருப்பண்டாம்பாளையம் காமாட்சி அம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் மணிவேல் (40). இவர் ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல் படையில் பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் விடுமுறைக்கு வந்த மணிவேல் 11 நாள் ஊரில் இருந்தார். இதையடுத்து மீண்டும் வேலைக்கு செல்ல கடந்த மாதம் 22ம் தேதி மணிவேலை அவரது சகோதரர் மணிகண்டன் கோபி பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏற்றி அனுப்பி வைத்தார்.

கடந்த 25ம் தேதி மணிவேலின் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து மணிவேலிவிடம் செல்போன் இல்லாததால், ஜம்மு காஷ்மீரில் உள்ள அவரது கேம்பிற்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், மணிவேல் பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் மணிவேல் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோபி போலீசில் மணிவேலின் சகோதரர் மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், மாயமான மணிவேலை தேடி வருகின்றனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை