ராஜபாளையம் ஏகேடி தர்மராஜா மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா

 

ராஜபாளையம், மார்ச் 19: ராஜபாளையம் ஏகேடி தர்மராஜா பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுமார் 750 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. ராஜபாளையம் ஏகேடி தர்மராஜா பெண்கள் கல்லூரியில் 2019-2022 மற்றும் 2020-2023ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் 747 மாணவிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்கள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு, பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் பெண்கள் உயர்கல்வி கற்பதால் ஏற்படும் சமூக மாற்றங்கள் குறித்து பேசினார். அரசு பெண் கல்வி வளர்ச்சியில் காட்டிவரும் முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துரைத்தார்.கல்லூரியின் செயலரும் தாளாளருமான கிருஷ்ணமராஜூ பாராட்டுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் ஜமுனா வரவேற்புரையாற்றி முதன்மை அறிக்கையை வாசித்தார்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை