ரவை இல்லாமல் உப்புமா கிண்ட முடியுமா? பாஜவை வறுத்தெடுத்த திண்டுக்கல் ஐ.லியோனி

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக  மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை  ஆதரித்து தமிழக பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி பஸ் நிலையம் அருகில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது. மோடி தமிழகம் வந்தால் திருக்குறள் கூறி பேசுவார். ஐஐடி வந்தபோது பாரதியார் பாட்டு பாடினார். பாரதியார் பாட்டை பாடி விட்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்தியை அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டுக்குள் வந்து தமிழ்நாடு உடை அணிந்து கொண்டு இட்லி, சாம்பார், சட்னி, வடை பிடிக்கும் என்று மோடி கூறுகிறார். வாயில் வடை சுடுவது, ரவை இல்லாமல் உப்புமா கிண்டுவது தமிழகத்தில் எடுபடாது. இவ்வாறு அவர் பேசினார்.* தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்துகிறார் முதல்வர்தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி நேற்று பரப்புரை மேற்கொண்டார். வேலூரில் சத்துவாச்சாரி, சார்பனாமேடு, அம்பேத்கர் நகர், கொணவட்டம் பகுதிகளில் நடந்த பரப்புரை கூட்டங்களில் திறந்த ஜீப்பில் அவர் பேசியதாவது: இங்கு பாஜவும், அதிமுகவும் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி 25, 20, 12 பிறகு 5, 3, 0 என்று தனித்தனியாக நிற்கின்றனர். இருவருமே ஜீரோக்கள்தான். இங்கு ஸ்டாலின்தான் ஹீரோ. அதனால் அவர்கள் பெறப்போவதும் ஜீரோதான். இங்கு வேட்பாளர்களாக இஸ்லாமியர், இந்துக்கள் உள்ளனர். அவர்களுக்கு பிரசாரம் செய்யும் நான் கிறிஸ்தவன். மதத்தால் வேறுபட்டாலும் தமிழர்களாக இணைந்துள்ளோம். இதுதான் தமிழ்நாடு. அப்படிப்பட்ட மக்களை பிரித்து பார்க்கிறது பாஜ. அது தமிழகத்தில் நடக்காது. அதேபோல் சமூகத்தில் வெறுப்பாக பார்க்கப்பட்ட மூன்றாம் பாலினத்தவரை திருநங்கை என்ற அழகான பெயரை வைத்து சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தை கொடுத்தது திமுக. இங்கு திருநங்கை ஒருவரும் போட்டியிடுகிறார். அதுதான் திமுக….

Related posts

சொல்லிட்டாங்க…

மக்களவை தேர்தல் பணிகளில் மந்தம்; 5 மாநில காங்கிரஸ் தலைவர்களின் பதவி பறிப்பு?.. தமிழ்நாடு பொறுப்பாளரும் மாற்றப்படுகிறார்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் இன்று இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம்: க.சுந்தர் எம்எல்ஏ அறிவிப்பு