ரசாயனத்தால் பழுக்க வைத்த 1 டன் மாம்பழம், வாழைப்பழம் பறிமுதல் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடவடிக்கை திருவண்ணாமலையில் அதிரடி சோதனை

திருவண்ணாமலை, மே 23: திருவண்ணாமலையில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த ஒரு டன் மாம்பழம் மற்றும் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில், உணவு பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்காக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை நடத்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருவண்ணாமலையில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எழில் சிக்கையராஜா, சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருவண்ணாமலை தேரடி வீதி பகுதியில் நடந்த சோதனையில், எத்தியோபியான் எனும் ரசாயனத்தை பயன்படுத்தி, பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், எத்தலின் எனும் ரசாயன ஸ்பிரே பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 500 வாழைப்பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரே சீரான நிறத்துடன் பழுக்க வைப்பதற்காக, இதுபோன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதுபோல பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடுவதால், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

அதோடு, உடல் நலிவுற்றோர், குழந்தைகள் சாப்பிட்டால் மிகப்பெரிய அளவிலான ஆபத்தை ஏற்படக்கூடியது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, ரசாயனத்தை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ததாக 3 நபர்கள் மீது, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், திருவண்ணாமலையில் உள்ள உணவகங்கள் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. சுகாதாரமான முறையில் உணவு சமைக்க வேண்டும், உணவுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை