மேவளூர்குப்பம் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக ஆலோசனை கூட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியத்தில் அடங்கிய மேவளூர்குப்பம், மண்ணூர், வளர்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மேவளூர்குப்பத்தில் நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார். ஒன்றிய அவைத் தலைவர் மோகனன், மாவட்ட துணை அமைப்பாளர் முருகன், ஒன்றிய அமைப்பாளர் மண்ணூர் சரவணன், ஒன்றிய துணை செயலாளர் ராஜேஸ்வரி பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தமிழ்குமரன், மாவட்ட கலை இலக்கியப் பேரவை துணை அமைப்பாளர் ஜெயகரன் ஆகியோர் கலந்து கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது, அரசின் சாதனைகள் குறித்து மக்களுக்கு எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மண்ணூர் பமிளா சரவணன், ஒன்றிய துணை அமைப்பாளர் தண்டலம் மனோஜ், வளர்புரம் எபி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

புதுச்சேரி அமைச்சர் மகளுக்கு சொந்தமான இடத்தில் சந்தனகட்டைகள் பறிமுதல் சிபிஐ விசாரணை தேவை: முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்

அதிமுக ஒன்று சேர வேண்டும் என்றால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இபிஎஸ் தலைமையை ஏற்றால் பரிசீலிப்போம்: முன்னாள் அமைச்சர் கண்டிஷன்

மாநில கல்வி கொள்கைக்கு ஏற்றார்போல் மருத்துவ படிப்பு நீட் தேர்வு தேவையில்லாதது: அன்புமணி பேட்டி