மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு விழா

காரிமங்கலம்: காரிமங்கலம் பேரூராட்சி 6வது வார்டு அண்ணா நகர் பகுதியில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ₹15 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா தலைமை வகித்தார். ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் காவேரி, கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இயக்குனர் ரவிசங்கர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மாணிக்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞரணி பாரதி வரவேற்றார். விழாவில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் பங்கேற்று, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் சிவம், ஒன்றிய அவைத் தலைவர் மகாலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர் சந்திரன், நிர்வாகிகள் அஜித், பாலு, கௌதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி