மேலக்கோட்டையூர் விளையாட்டு பல்கலை வளாகத்தில் மாநில அளவிலான தடகள போட்டி

திருப்போரூர், அக்.28: மேலக்கோட்டையூர் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான தடகள போட்டி நேற்று தொடங்கியது. இதனை, கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார். 64வது குடியரசு தினத்தையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூர் உடற்கல்வியியல் மற்றும் விளயைாட்டு பல்கலை கழக வளாகத்தில், 64வது குடியரசு தினயொட்டி, மாநில அளவிலான தடகள போட்டி நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தடகள போட்டியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இப்போட்டியில், 38 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். நேற்று தொடங்கிய இந்த போட்டி, நாளை வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

இதில், மாநிலம் முழுவதும் இருந்து, 2,660 மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இதோபோல், வரும் 1ம் தேதி முதல் மாணவர்களுக்கான போட்டி தொடங்கி நடைபெற உள்ளன. இவற்றில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவில், திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன், செங்கல்பட்டு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருவளர்ச்செல்வன், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (பெண்கள்) நிர்மலாதேவி, முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (ஆண்கள்) கோபால கிருஷ்ணன், மதுராந்தகம் மாவட்ட கல்வி அலுவலர் அய்யாசாமி, செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மேலக்கோட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் கௌதமி ஆறுமுகம், திமுக செயற்குழு உறுப்பினர் அன்புச்செழியன் ஆகியோர் பங்கேற்றனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்