மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை!: கோவை குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை..!!

கோவை: கோவை குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை, தொண்டாமுத்தூர் பகுதியில் தொடர் மழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் மூடப்பட்டிருக்கும் என்று வனத்துறை தெரிவித்திருக்கிறது. கோவை தொண்டாமுத்தூரில் பெய்த பலத்த மழையால் அட்டுக்கல் புத்தூர் புதுக்காலனி பகுதியில் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்ததால் 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழைநீரை பேரூராட்சி ஊழியர்கள் மோட்டார் மூலம் அகற்றி வருகின்றனர். இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 30 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் நீர் திறப்பு 7,803 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது….

Related posts

வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை அதிகரித்துள்ள நிலையில் டான்ஜெட்கோ தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாட்டில் இன்று, நாளை மற்றும் ஜூன் 5-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை