மேய்ச்சல் நிலமாக மாறிய கோவிலூர் ஏரி

தர்மபுரி, டிச.30: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்தது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரியில் நீர்நிலைகள் வறண்டு மேய்ச்சல் நிலமாக காணப்படுகிறது. நல்லம்பள்ளி தாலுகாவில் கோவிலூர், சேஷம்பட்டி, நல்லம்பள்ளி, நார்த்தம்பட்டி, லலிகம் உள்பட 20க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதில் நல்லபள்ளி அருகே உள்ள கோவிலில் ஏரி 200 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இந்த ஏரிக்கு வத்தல் மலையிலிருந்து, லளிகம் நார்த்தம் பட்டி வழியாக கோவிலூர் வந்தடைகிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில், கோவிலூர் ஏரி நீர் நிரம்பி வழிந்து ஓடியது. ஆனால், நடப்பாண்டில் பருவமழை குறைவாக பெய்ததால், லளிகம் ஏரி கோவிலூர் ஏரி, நார்த்தம்பட்டி ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் தண்ணீர் இன்றி மேய்ச்சல் நிலமாக காணப்படுகிறது. ஏரிகள் வறண்டதால் லளிகம், நார்த்தம்பட்டி, நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தை பட்டத்திற்கு சாகுபடி செய்வது, தள்ளி போகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்