மெட்ரோ ரயில் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான கிரியேட்டிவ் டிசைன் போட்டி

திருவொற்றியூர், ஜன. 23: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கவும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் ‘மெட்ரோ ரயிலை பயன்படுத்தவும், பணத்தையும் நேரத்தையும் சேமிக்கவும்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு கிரியேட்டிவ் டிசைன் போட்டியை நடத்துகிறது. கல்லூரி மாணவர்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டை ஊக்குவிக்கவும் மற்றும் மேம்படுத்துவதே போட்டியின் முக்கிய நோக்கமாகும். இந்த முயற்சி மாணவர் சமூகம் மத்தியில் சென்னை மெட்ரோ ரயில் சேவை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான ஒரு படியாகும். இது ஒரு வெளிப்படையான போட்டி மற்றும் இதற்கான பதிவு ஆன்லைன் படிவம் மூலம் பதிவு செய்யப்படும். இதற்கான படிவம் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுடன் பகிரப்படும். இந்த போட்டியில் பங்கேற்க <https://forms.gle/oa3qyGG3kmW2vHn16 > என்ற ஆன்லைன் இணைதளம் வாயிலாக பிப்ரவரி 22ம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம். அதன்படி, போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ₹15000, இரண்டாம் பரிசாக ₹10000 மற்றும் 3ம் பரிசாக ₹5000 வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு