மெட்ரோ ரயிலில் பல்வேறு நிகழ்வுகளுக்கான க்யூஆர் டிக்கெட் முன்பதிவு வசதி

சென்னை, ஜூன் 7: சென்னை மெட்ரோ நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஜீபோடெக்னாலசிஸ் தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஜிபோ டெக்னாலஜிஸில் நடைபெற்ற பணியாளர்களின் குடும்ப சந்திப்பு நிகழ்விற்கான அழைப்பிதழ்களில் முன்பதிவு செய்யப்பட்ட 5 ஆயிரம் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டுகளை அச்சிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு தடையற்ற மற்றும் வசதியான பயணத்தை வழங்கியதோடு, அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லவும் வசதியாக இருந்தது.

இந்த புதிய முன்பதிவு செய்யப்பட்ட க்யூஆர் குறியீட்டு டிக்கெட்டுகளின் அறிமுகமானது மெட்ரோ பயணச்சீட்டில் ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கிறது. தொழில்நுட்பம், வசதி மற்றும் பொது மக்களின் நலனுக்காக இந்த முயற்சியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. மேலும், கார்ப்பரேட் மூலம் மொத்த முன்பதிவு செய்யப்பட்ட க்யூஆர் குறியீட்டு டிக்கெட்டுகளின் அறிமுகமானது பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, வசதியான மற்றும் திறமையான போக்குவரத்து வசதியை பயணிகளுக்கு வழங்குகிறது. அதன்படி, மொத்தமாக க்யூஆர் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முறை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாது பொதுமக்களும் இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு மொத்தமாக க்யூஆர் பயணச்சீட்டு பெற முன்பதிவு செய்வதற்கும், கூடுதல் தகவலுக்கும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் lmc@cmrl.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உரம் பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்

திருச்சுழி-உடையானம்பட்டி இடையே குண்டாறு குறுக்கே உயர்மட்ட பாலம்: கட்டுமான பணிகள் விறுவிறுப்பு

பெண் அடித்து கொலை? கண்மாயில் உடல் மீட்பு