மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பழங்குடியின மக்களுக்கு மளிகை தொகுப்பு வழங்கல்

கோத்தகிரி: கீழ்கோத்தகிரி அருகே உள்ள பழங்குடியின கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் பழங்குடியின மக்களுக்கு மளிகை தொகுப்புகள் வழங்கப்பட்டது. கீழ் கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரக்கோடு,கடினமாளா ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர் பீமன் தலைமையில் பழங்குடியின மக்களுக்கு மளிகை தொகுப்பு,நலத்திட்ட உதவிகள் வழங்கி, இனிப்புகள் வழங்கப்பட்டு முதல்வரின் பிறந்தநாள் விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் அரக்கோடு,கடினமாளா ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 6 கிராமங்களில் வசிக்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு மளிகை தொகுப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்வில் ஒன்றிய துணை செயலாளர்கள் நாகராஜ், ருக்குமணி,அரக்கோடு ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா வெள்ளத்தொரை,கடினமாளா ஊராட்சி தலைவர் சாந்தி,ஐடிவிங் விக்னேஷ்வரன், ஆனந்தன்,மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், ரவீந்திரன், ராம்கோபால்,எல்பிஎப் முருகன்,ஆதித்தன், ராஜேந்திரன், சண்முகநாதன்,ராஜூ டெய்லர், மருதையன்,செல்வராஜ் மற்றும் அரக்கோடு மற்றும் கடினமாளா, சுற்றுவட்டார பழங்குடியின மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

Related posts

கஞ்சா விற்ற 3 பேர் கைது

சத்தி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1540க்கு விற்பனை ஒரே நாளில் ரூ.540 உயர்வு

மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி