முன்னாள் முதல்வர் ஜெ. பிறந்தநாள் விழா சிவகாசியில் நலத்திட்ட உதவிகள்: முன்னாள் அமைச்சர் வழங்கினார்

 

சிவகாசி, பிப். 25: சிவகாசியில் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவையொட்டி 15 இடங்களில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவையொட்டி சிவகாசி சட்டமன்ற தொகுதியில் சிவகாசி, திருத்தங்கல், விஸ்வநத்தம், சித்துராஜபுரம், சாட்சியாபுரத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சிவகாசி சிவன்கோவில், நாரணாபுரம், சாட்சியாபுரம் ஆகிய பகுதிகளில் அன்னதானம் வழங்கும் நிகழ்சியையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பலராம், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி ஒன்றிய கழக செயலாளர்கள் ஆரோக்கியம், லட்சுமிநாராயணன், சித்துராஜபுரம் பாலாஜி, கருப்பசாமி, மாநகரப் பகுதி கழகச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாம்(எ)ராஜஅபினேஷ்வரன், கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட இல்ககிய அணி செயலாளர் ரமணா, மாவட்ட கலைபிரிவு செயலாளர் மாரிமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் கார்த்திக், மாவட்ட டாஸ்மாக் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது