முத்துப்பேட்டை திமுக சார்பில் இல்லம் தேடி இளைஞர் சேர்ப்பு நிகழ்ச்சி

 

முத்துப்பேட்டை, அக். 13: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திமுக பேரூர் இளைஞரணி சார்பில் இல்லம் தேடி இளைஞர் சேர்ப்பு நிகழ்ச்சி திமுக மாவட்ட துணைச் செயலாளரும், நகர செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார் முன்னிலையில் முத்துப்பேட்டை பல்வேறு இடங்களில் இல்லம் தேடி சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.

இதில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் குலாம், காளிதாஸ், இஜாஸ் அகமது, வார்டு செயலாளர் முஸ்தாக் அகமது, நிர்வாகி முஹம்மது காசிம், சட்டமன்ற தொகுதி சமூக வளைதள பொறுப்பாளர் ராகோ.உதயசூரியன், பேரூர் தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முகம்மது சப்வான், மாணவரணி அமைப்பாளர் இன்பா.பிரபாகரன், இளைஞரணி நிர்வாகிகள் நவீன், கமருதீன், இம்ரான்கான், மாஸ் யூனுஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது