முத்துப்பேட்டை அருகே தொண்டியக்காடு அரசு பள்ளி ஆண்டு விழா

முத்துப்பேட்டை, பிப். 21: முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா ஊராட்சி மன்றத்தலைவர் கமலா பூவானம் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் மனோகரன். பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர் விஜி, முன்னாள் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழாசிரியர் சாந்தி வரவேற்று பேசினார். இதில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், கிராம மக்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் செல்வராசு நன்றி கூறினார்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது