முத்துப்பேட்டையில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

 

முத்துப்பேட்டை, ஏப்.10: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வர்த்தகக்கழகம் சார்பில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது, மாநில துணைத்தலைவர் ராஜாராமன், ஆலோசகர் அந்தோணி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பொருளாளர் கிஷோர் வரவேற்று பேசினார்.

இதில் செயற்குழு உறுப்பினர்கள் இர்பான் ஹைதர் அலி, இளங்கோ, அமிர்தா தியாகராஜன், மீனா கணேசன், சுவாமி நாதன், நவாஸ்கான், வடிவழகன், அம்பேலா சாகுல், கலையரசன் ஆகியோர் மதநல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஒன்றாக அமர்ந்து ரமலான் நோன்பு திறந்தனர். இதில் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் வியாபாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி உள்ளது தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது: தயாநிதி மாறன் எம்.பி. பேட்டி

கலைஞர் எனக்கு தந்தை போன்றவர்: அமைச்சர் துரைமுருகன் உருக்கம்

குற்ற சம்பவங்களை தடுக்க தவறிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் : துணை ஆணையர் அதிரடி