முத்தாலம்மன் கோயில் திருவிழா எம்எல்ஏ கோ.தளபதி பங்கேற்பு

 

மதுரை, ஜூன் 15: மதுரை விராட்டிபத்துவில் ஸ்ரீமுத்தாலம்மன் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலின் வைகாசி திருவிழா ஜூன் 6ம் தேதி செவ்வாய் சாட்டுதலுடன் தொடங்கியது. கிராம தேவதைகள், காணியாள சுவாமி, வீதியுடைய அய்யனார் சுவாமி வழிபாடு நேற்று நடந்தது. தொடர்ந்து ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு கலை அலங்காரபெட்டியுடன் சிம்ம வாகனத்துடன் புறப்பட்டு அலங்கார மண்டபம் சென்றடைந்தது. அங்கு அலங்காரம் செய்யப்பட்ட ஸ்ரீமுத்தாலம்மன் திருவீதி உலா சென்றார். பின்னர் அம்மனுக்கு திருக்கண் திறப்பு செய்து அதிகாலையில் கோயிலை வந்தடைந்தது.

இதையடுத்து, நேற்று அதிகாலை கிராம மக்கள் மாவிளக்கு எடுத்து கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இந்நிகழ்வில் 67வது வட்ட திமுக சார்பில் மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான கோ.தளபதி கலந்துகொண்டார். பின்னர் அவர் பக்தர்களுக்கு பொங்கல் வழங்கினார். வட்ட செயலாளர் ராஜேஷ் ஏற்பாட்டின் பேரில் பக்தர்களுக்கு சுண்டல், பாசிபயிறு, கேசரி, பிஸ்கெட், குளிர்பானம் முதலியவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கவுன்சிலர்கள் சுதன், பாமாமுருகன், நிர்வாகிகள் வேல்முருகன், மகேஷ்சுந்தர், நாகலிங்கம், வினோத், புவனேஸ்வரி, ராஜகுமாரி, கார்த்திக், ஆனந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

ராஜபாளையத்தில் பலத்த காற்று மரம் சாய்ந்து வாகனங்கள் சேதம்

சட்ட விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்