முதுகுளத்தூரில் மெகா தூய்மை பணி மும்முரம்

சாயல்குடி : தமிழக முதல்வர் அறிவுறுத்தல்படி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூர், சாயல்குடி, அபிராமம், கமுதி, ஆர்எஸ். மங்கலம், தொண்டி, மண்டபம் ஆகிய 7 பேரூராட்சிகளில் மழைநீர்- கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரவும், மழைநீர் தேங்கும் இடங்களை சீரமைக்கவும் அறிவுறுத்தினார். அதன்பேரில் செயல்அலுவலர் மாலதி மேற்பார்வையில் முதுகுளத்தூரில் 15 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்கள், பஜார் மற்றும் பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி, கடலாடி சாலை வழித்தடங்களில் செல்லும் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் குளங்களுக்கு செல்லும் மழைநீர் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்பட்டது. மேலும் தெருக்களில் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்டன.மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் கொரோனா, டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்களிலிருந்து பாதுக்காக்க அரசு கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என செயல்அலுவலர் மாலதி அறிவுறுத்தியுள்ளார்….

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு