முதியவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

போச்சம்பள்ளி, ஜன.7: பாரூர் அருகே, ஆமணக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சந்தோஷ்(38). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில், ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. அதிலிருந்து பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் வகையில் குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த நில நாட்களுக்கு முன்பு, அந்த குடிநீர் குழாயை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே, குடிநீர் குழாயை யார் சேதப்படுத்தி இருப்பார்கள் என்பது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்வம்(65), திருப்பதி(35), ரவி(47), பெருமாள்(42) ஆகியோரிடம் சந்தோஷ் கேட்டுள்ளார். அப்போது, அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. திடீரென செல்வம் உள்பட 4 பேரும் சந்தோஷ் மீது பாய்ந்து சரமாரி தாக்கியுள்ளனர். மேலும், அவரது மூக்கை கடித்து குதறியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் செல்வம், ரவி உள்பட 4பேர் மீதும் பாரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்