முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை துணைவேந்தர்கள் மாநாடு: உயர்கல்வித்துறை செயல்பாடு குறித்து ஆலோசனை

சென்னை: உயர் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக, சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை நாளை துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை வேந்தர்கள் மாநாடு கடந்த 17ம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடப்பதாக இருந்தது. ஆனால், முதல்வரின் டெல்லி பயணம் காரணமாக, அது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, இந்த மாநாடு நாளை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், உயர் கல்வித்துறை அலுவலர்கள், அதேபோன்று மாநில கல்வி கொள்கையை வகுக்க கூடிய குழுவின் தலைவர், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.உயர்கல்வி துறையின் செயல்பாடுகள், புதிய கல்வி கொள்கை, உயர்கல்வித் துறையின் தரத்தை உயர்த்துவது, அண்ணா பல்கலைக்கழகம் போல் பிற பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களை மேம்படுத்துவது, அரசு கலைக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிப்பது, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் ’நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் திறன் பயிற்சிகளை அளிப்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்….

Related posts

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ₹8.5 கோடி தங்கம் பறிமுதல்: விமான நிலைய ஊழியர், பயணி கைது

ஓடும் காரில் தீவிபத்து

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் திட்ட பணிகளை பருவ மழைக்குள் முடிக்க வேண்டும்: ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி உத்தரவு