முதலமைச்சர் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்: தளபதி எம்எல்ஏ அறிக்கை

 

மதுரை, பிப்.28: மார்ச் 1 அன்று மதுரை மாநகர் திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மார்ச்1 அன்று கொண்டாடப்பட உள்ளது. அன்று மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட வேண்டும்.

அவ்வகையில் \”இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்\” திராவிட மாடல் அரசின் சாதனைகளையும், அறிக்கையையும் விளக்கும் வகையில் திண்ணை பிரசாரங்கள், பொதுக்கூட்டங்களை நடத்தி, பகுதி, வட்ட, ஒன்றிய, பேரூர் கிளைகள் தோறும் திமுக கொடிகள் ஏற்றி ஒலி பெருக்கி அமைத்து, மர கன்றுகள் நட்டும், இனிப்புகள் வழங்கியும், மாபெரும் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்.

மேலும் அன்னதானங்கள் வழங்கியும், முதியோர் இல்லங்கள் காப்பகங்களில் அறுசுவை உணவு வழங்கியும், அந்த இல்லங்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கியும், ஏழை எளிய சாமானியர்கள் பயன்படுகின்ற வகையில் நலத்திட்டங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக, வட்ட கழக, ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு