முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற திமுக எம்எல்ஏக்கள்

ஓசூர், ஏப்.25: நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ம்தேதி முடிவடைந்த நிலையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோரை, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்கள் பிரகாஷ் எம்எல்ஏ, மதியழகன் எம்எல்ஏ ஆகியோர், முதல்வரின் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் திமுக தீர்மான குழு துணை தலைவர் நாமக்கல் பார்.இளங்கோவன், மாநகர செயலாளர் மேயர் சத்யா, மாவட்ட துணை செயலாளர் முருகன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்