முதலமைச்சராக இங்கு வரவில்லை; ஒரு மாணவனாக வந்துள்ளேன்: சென்னையில் எம்.சி.சி பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: முதலமைச்சராக இங்கு வரவில்லை; ஒரு மாணவனாக வந்துள்ளேன். படித்த பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற மகிழ்ச்சியில் இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை என சென்னையில் எம்.சி.சி பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னையில் எம்.சி.சி பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; ‘முதலமைச்சராக இல்லாமல் மாணவனாக , பழைய நண்பனாக  இங்கு வந்துள்ளேன்.  இன்று பள்ளிக்கு வர போகிறேன் என்பதால் நேற்றிரவு மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை , வழக்கமாக 2..3 மணிக்குதான் தூங்குவேன், அந்த தூக்கமும் நேற்று வரவில்லை. மாணவப் பருவம் என்பது திரும்ப கிடைக்காத காலம். இந்த பள்ளியில் நான் படித்த போது எனது தந்தை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். பள்ளியில் அமைச்சரின் மகன் என்று நான் காட்டிக் கொள்வதை எனது தந்தை விரும்பமாட்டார். படிக்கின்ற காலத்தில் நானும் அவ்வாறு தான் இருந்தேன். இது என்னுடன் படித்த உங்கள் அனைவருக்கும் தெரியும்.  கோபாலபுரத்தில் உள்ள எனது இல்லத்திலிருந்து ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வரை நடந்து வந்து 29c பேருந்திலும், சில நேரம் சைக்கிளிலும் பள்ளிக்கு வந்துள்ளேன். பேருந்திலிருந்து இறங்கி ஸ்டெர்லிங் சாலையில் இருந்து பள்ளிக் கூடம் வரை நடந்தே வருவேன். பாதுகாப்பு காவலர்கள் ஒப்பு கொண்டிருந்தால் மிதிவண்டி அல்லது பேருந்திலேயே இன்றும் பள்ளிக்கு வந்திருப்பேன்.அரசியலுக்கு வருவேன், கட்சித் தலைவராக வருவேன், மாநில முதல்வராக வருவேன் என நினைத்து பார்த்ததில்லை. ஆனால் அவை அனைத்தும் நடந்துள்ளது, அதற்கு இந்த பள்ளியும் ஒரு காரணம். முதலமைச்சரை உருவாக்கிய பெருமை இந்த பள்ளிக்கு கிடைத்துள்ளது. பள்ளியில் அடி வாங்கியது, பென்சில் வாங்கியது, விளையாடியது குறித்து பலமுறை இங்கு வந்தபோது நினைவில் வந்துள்ளது. இப்படி ஒரு உயர்ந்த இடத்திற்கு நான் வந்ததற்கு இந்த பள்ளியும் ஒரு முக்கிய காரணம் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்’ என  முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியாக உரையாற்றினார்….

Related posts

நெரிசல் மிகுந்த ராயப்பேட்ைட பகுதியில் செப்டம்பரில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும்: அதிகாரிகள் தகவல்

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் புகைப்படம் தயாரிப்பு 14 வயது சிறுமியின் உருவம் வரைந்து வலைத்தளங்களில் தேடும் பணி தீவிரம்:  2011ம் ஆண்டு ஒன்றரை வயதில் குழந்தை மாயமான புகார்  நீதிமன்ற உத்தரவுப்படி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னையில் நான்காவது சம்பவம் சிறுமியை ஓடஓட விரட்டி கடித்து குதறிய தெருநாய்கள்: சிசிடிவி காட்சிகளால் மீண்டும் பரபரப்பு