மீன்பிடி தடைகாலம் உக்கடம் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து 50 சதவீதம் குறைந்தது

 

கோவை, மே 5: தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் மே மாதம் 29-ம் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடை காலமாக இருந்து வந்தது. இந்த தடை கால சீசனில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் இந்த 45 நாள் தடைகாலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தடைகாலம் வரும் ஜூன் மாதம் 14-ந்தேதி முடிவடைகிறது. இந்த ஆண்டின் தடை காலம் ஏப்.15ம் தேதி முதல் தொடங்கியது.

தடை காலம் தொடங்கியதை அடுத்து கடலோர மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.அதே சமயம் என்ஜின் பொருத்தப்படாத பாரம்பரிய படகுகள் மூலம் குறிப்பிட்ட எல்லைக்குள் மீன்பிடிக்க தடை இல்லை. நாட்டுப்படகில் மீன்பிடிக்க செல்லலாம். இதனால், தமிழகத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு வரும் மீன் வரத்துகள் குறைந்துள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து வரும் மீன்கள் தான் விற்பனை செய்யப்படுகின்றன. கோவை உக்கடத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிற்கு வரும் மீன்கள் குறைந்துள்ளது. மேலும், விலையும் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

Related posts

முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி தருவதாக ₹525 கோடி மோசடி மயிலாப்பூர் நிதி நிறுவனத்தை பாதிக்கப்பட்டோர் முற்றுகை: பணத்தை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தியதாக தேவநாதன் மீது புகார்

டைடல் பார்க் பகுதியில் ₹108 கோடியில் கட்டப்படும் ‘U’ வடிவ மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்: டிஎன்ஆர்டிசி அதிகாரி தகவல்

பல்லாவரத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கன்டோன்மென்ட் போர்டு பள்ளியில் மாணவர்களிடம் கட்டணம் வசூல்: அனைவருக்கும் கல்வி கொள்கைக்கு எதிரானது என கண்டனம்