மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு பேருந்தை சிறைபிடித்து உறவினர்கள் மறியல்

 

ரிஷிவந்தியம், ஜன. 31: மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பேருந்தை சிறைபிடித்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட பழைய சிறுவங்கூர் அருகே உள்ள மாந்தாபாளையம் காட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த வேணு மகன் ஆறுமுகம்(37). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மணிமுத்தாறு அணையில் மீன் பிடிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பாத ஆறுமுகத்தை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தேடியபோது மணிமுத்தாறு அணையின் கரை பகுதியில் சடலமாக கிடந்தது தெரிந்தது. இந்நிலையில் மீன்பிடிக்கச் சென்றவர் உயிரிழந்ததில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் வாணாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பழையசிறுவங்கூர் கிராமத்தில் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து தியாகதுருகம்- கள்ளக்குறிச்சி- சங்கராபுரம்- பகண்டை கூட்டு சாலை நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த தியாகதுருகம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது இறப்பில் சந்தேகம் இருப்பதால் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், உதவி ஆய்வாளர்கள் பகண்டை கூட்டு சாலை பிரபாகரன், கள்ளக்குறிச்சி சத்தியசீலன், தியாகதுருகம் சூர்யா உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்