மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் இன்று ராகு கேது பெயர்ச்சி விழா

திருமங்கலம், அக்.8: திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ராகு கேது பெயர்ச்சி விழாவையொட்டி நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற உள்ளது. திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ராகு கேது பெயர்ச்சி விழா இன்று அக்டோபர் 8ம் தேதி நடைபெற உள்ளது. ராகுபகவான் மேஷராசியில் இருந்து மீனராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்.

இதனையொட்டி மாலை 3.40 மணிக்கு நடைபெறும் இந்த பெயர்ச்சி விழாவையொட்டி மதியம் 3 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ராகு கோது மூலமந்திர ஹோமம் நடைபெற உள்ளது. தொடர்ந்து கோயிலில் அமைந்துள்ள நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடைபெறும்.

இதில் மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம் மற்றும் மீனம் ராசிகாரர்களுக்கு பரிகாரம் செய்யப்பட உள்ளது. பரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களது பெயர்களை கோயிலில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகின்றன. ராகு கேது பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி அங்கயற்கண்ணி, தக்கார் சக்கரையம்மாள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை