மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் சாவு

தூத்துக்குடி, ஏப்.7: தூத்துக்குடி ஆரோக்கியபுரம், அய்யர் விளையைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஹரிகிருஷ்ணன்(47). எலக்ட்ரீசியனான இவர் நேற்று முன்தினம் திருச்செந்தூர்-போல்டன் புரம் ரோட்டில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸில் உள்ள ஒரு கடையில் நண்பர் ஒருவருடன் சேர்ந்து டியூப்லைட் பொருந்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஹரி கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து, அவர் உயிரிழந்தார். தகவலறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஹரிகிருஷ்ணனின் மகன் கார்த்திக்ராஜா(24) அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு