மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார் கண்டு ரசித்து பயணிகள், பொதுமக்கள் உற்சாகம் ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் ரோடு

முத்துப்பேட்டை: ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் ரோட்டை சீரமைக்க பயணிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் சாலை இருபுறமும் சாலை மட்டத்தை உயர்த்தி போடப்பட்டதால் இப்பகுதி சாலை விரிசல் ஏற்பட்டு ஆங்காங்கே சேதமாகியுள்ளன. இதில் சாலை ஓரம் போதிய தடுப்பு கட்டுமானங்கள் இல்லாததால் அடிக்கடி இந்த சாலை சேதமாகி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்லும் போது, ஆபத்தான பள்ளங்களில் விழுந்து செல்வதால் வாகனங்களின் சக்கரம் திசை மாறி சென்று விடுகிறது. இதனால் சமீபகாலமாக சிறு, சிறு விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதில் நான்கு சக்கர வாகனங்கள், இப்பகுதியில் ஓரளவுக் ஜாக்கிரதையாக சென்றாலும் இரு சக்கர வாகனங்களின் செல்பவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்