மார்த்தாண்டத்தில் 13 கிலோ கஞ்சா, பணத்துடன் சென்னை பெண் உள்பட 2 பேர் கைது

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சென்னை பெண் உள்பட 2 பேர், 13 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோடு பகுதியில் கையில் பொட்டலங்களுடன் 2 பேர் சந்தேகப்படும்படியாக நின்றிருந்தனர். தகவலின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஒரு ஆண், பெண் தனியாக நின்றிருந்தனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசினர். அதனால் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர்கள் கண்ணணூர் பூந்தோப்பு சொசகுடிவிளையை சேர்ந்த மத்தியாஸ் மகன் ராஜேஸ்வரன் (25), சென்னை பெரும்பாக்கம் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்த ரெகு மனைவி அஜந்தா (38) என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, 13 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மற்றும் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர். …

Related posts

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை

பிரிட்ஜில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு: 150 பசுக்கள் மீட்பு; ம.பி போலீஸ் நடவடிக்கை

காரில் கடத்திய ₹2 கோடி தங்கம் 1 கிலோ வெள்ளி நகை பறிமுதல்