மார்த்தாண்டத்தில் பரபரப்பு கழிவு நீரை மழை நீரோடையில் பாய்ச்சிய வாகனம் சிறைபிடிப்பு

மார்த்தாண்டம், பிப்.18: தமிழக அரசின் உத்தரவுபடி வீட்டில் உள்ள கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் கழிவுநீரை சாலையில் உள்ள மழை நீர் ஓடைகளில் விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கழிவுநீரை ஓடைகள் மற்றும் சாலைகளில் உள்ள ஓடைகளிலும் பாய்ச்சுவோர்களுக்கு அபராதம் விதிப்பதோடு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இருந்து அந்த குழாய்கள் அடைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுகளை ஏற்றிக்கொண்டு தனியார் வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனம் மார்த்தாண்டத்தை அடுத்த பம்மத்தில் சாலையின் ஓரத்தில் உள்ள ஓடையில் கழிவுநீரை பாய்ச்சியதாக கூறப்படுகிறது.

இதனைக்கண்டு அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கல் பலரும் அங்கு குவிந்தனர். குழித்துறை நகராட்சி கவுன்சிலர் ரத்தினமணி தலைமையில் பொதுமக்கள் செப்டிங் டேங்க் கழிவு ஏற்றிவந்த வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் கழிவுநீர் ஏற்றி வந்த வாகனம் மற்றும் ஓட்டுநரை பிடித்து குழித்துறை நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது