மார்கழி திருவாதிரையை முன்னிட்டு பிறவிமருந்தீஸ்வரர் கோயிலில் நடராஜ பெருமான் வீதியுலா

திருத்துறைப்பூண்டி, டிச. 28: மார்கழி திருவாதிரையை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பிறவிமருந்தீஸ்வரர் கோயிலில் (பெரிய கோயில்) நேற்று அதிகாலை இரவு 2 மணிக்கு தாண்டவராகிய நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து நேற்று காலை நடராஜர் பெருமானுக்கு தீபாராதனைகள் நடந்தது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நடராஜ பெருமான் வீதீயுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முருகையன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு