மாரியம்மன் கோயில் திருவிழா

காரிமங்கலம், மே 25: காரிமங்கலம் அடுத்த மல்லிகுட்டை ஊராட்சியில் மாரியம்மன் மற்றும் பட்டாளம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. பெண்கள் மேளதாளம் மற்றும் வானவேடிக்கையுடன், மாரியம்மன் மற்றும் பட்டாளம்மனுக்கு மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (25ம்தேதி) எருதுவிடும் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை காமலாபுரம்மேடு, அல்லிசின்னபுதூர், பெரியபுதூர், நிம்மாகரை, நல்லாம்பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்