மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டல்

சென்னை: பெரியமேடு பகுதியில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் மாமூல் கேட்டு தகராறு செய்து, 2 பார்சல்களை எடுத்து செல்ல முயன்ற 2 ரவுடிகளை போலீசார் சிசிடிவி பதிவு மூலம் தேடி வருகின்றனர். சென்னை பெரியமேடு கார்டூர் சடையப்பன் தெருவில் ரிஸ்வான் என்பவர் ‘ஸ்டார் கார்கோ’ என்ற பெயரில் பார்சல் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில் மூலம் பார்சல்கள் வருகிறது. அதன்படி கடந்த 1ம் தேதி இரவு லாரில் வந்த பார்சல்களை நிறுவனத்தின் ஊழியர்கள் இறக்கி கொண்டிருந்தனர். அப்போது, போதையில் வந்த 2 பேரை லாரியில் இருந்து பார்சல்களை இறக்க வேண்டும் என்றால் எங்களுக்கு மாமூல் தர வேண்டும் என்று கூறி தகராறு செய்துள்ளனர். அதற்கு பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் யாருக்கும் மாமூல் தர முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 2 ரவுடிகள் பார்சல் நிறுவனத்தில் உள்ள 2 பார்சல்களை எடுத்து செல்ல முயன்றனர். அப்போது அதை தடுக்க முயன்ற வடமாநில ஊழியரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பார்சல் சர்வீஸ் நிறுவன உரிமையாளர் ரிஸ்வான் பெரியமேடு போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்படி போலீசார் விரைந்து வந்த சிசிடிவி பதிவுகளை வைத்து தப்பி ஓடிய 2 ரவுடிகளை தேடி வருகின்றனர்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்