மாமண்டூர் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா

 

மதுராந்தகம் ஜூன் 11: மாமண்டூர் ஊராட்சியில் ரூ. 7 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாமண்டூர் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு பகுதிநேர ரேஷன் கடை அமைத்துத் தர வேண்டும் என மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்திருந்தனர். இதனை அடுத்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாமண்டூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் புதிதாக பகுதிநேர ரேஷன் கடை கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் உஷாராணி ரவி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அப்பாதுரை முன்னிலைவகித்தார். முன்னதாக ஒன்றிய குழு துணைப் பெருந்தலைவர் குமரவேல் அனைவரையும் வரவேற்றார். இதில் மதுராந்தகம் எம் எல் ஏ மரகதம் குமரவேல் கலந்து கொண்டு புதிய ரேஷன் கடை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு சர்க்கரை வழங்கினார். இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன்,மற்றும் நிர்வாகிகள் விநாயகம்,குமார், ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

மாவட்ட தீ தடுப்பு, தொழிற்சாலைகள் : பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை

மக்கள் போராட்டம் எதிரொலி: சாத்தான்குளத்தில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை

அனைத்து பேருந்துகளும் புதுக்கோட்டைக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்