மாநில சிலம்ப போட்டிக்கு சாயர்புரம் பள்ளி மாணவிகள் தகுதி

ஏரல், டிச. 2: சாயர்புரம் பள்ளி மாணவிகள், மாநில போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர். தூத்துக்குடி தருவை மைதானத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின புதிய விளையாட்டு போட்டிகள், மாவட்ட அளவில் நடந்தது. இதில் சாயர்புரம் தூயமேரி மகளிர் பள்ளி மாணவிகள் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் சுபிக்‌ஷா, 19 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆஷா மற்றும் சுஜிதா ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடம் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் ஜெயபாண்டியன், தலைமை ஆசிரியர் நிர்மலா எப்சிபாய், உடற்கல்வி ஆசிரியைகள் ரெட்லின் ஷீலா, அன்ஸி சோபியா மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவிகள் பாராட்டினர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்