மாநில கூடைப்பந்து போட்டியில் கோவை அணி சாம்பியன் பட்டம்

விருதுநகர், மே 27:விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் 16 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான மாநில கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து 41 ஆண்கள், 41 பெண்கள் அணிகள் சார்பில் 984 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக துவக்கவிழாவில் மாநில கூடைப்பந்துகழக செயலாளர் ஆசாத் அகமது வரவேற்றார். மாநில கூடைப்பந்து கழக தலைவர் ஆதவ் அர்ஜூனா சிறப்புரையாற்றினார். குளோபல் கம்பெனி தலைவர் முரளிதரன் போட்டியை துவக்கி வைத்தார். பெண்களுக்கான இறுதி போட்டியில் கோவை மாவட்ட அணி 91-61 புள்ளிகள் கணக்கில் மயிலாடுதுறை அணியை வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை பெற்றது. மூன்றாம் இடத்தை தூத்துக்குடி மாவட்ட அணி பெற்றது.

ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் கோவை அணி 95-92 என்ற புள்ளிகள் கணக்கில் திருவள்ளூர் மாவட்ட அணியை வெற்று சாம்பியன் கோப்பையை பெற்றது. மூன்றாவது இடத்தை சென்னை அணி பெற்றது. பரிசளிப்பு விழாவில் காமராஜ் பொறியியல் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், செந்திக்குமார நாடார் கல்லூரி செயலாளர் சர்பராஜன், விருதுநகர் கூடைப்பந்து செயலாளர் சத்தியம் வெற்றி பெற்ற மாவட்ட அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினர். தமிழ்நாடு கூடைப்பந்து கழக செயலாளர் ஆசாஷ், மற்றும் பொறுப்பாளர்கள் அருள்வெங்கடேஷ், பாலன், சாந்தன், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்